×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை & நடிகர்கள் அறிவிப்புடன் கூடிய ‘தளபதி68’ படத்தின் பூஜை வீடியோ வெளியீடு.!

நடிகை & நடிகர்கள் அறிவிப்புடன் கூடிய ‘தளபதி68’ படத்தின் பூஜை வீடியோ வெளியீடு.!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் இன்று தளபதி 68 திரைப்படத்தின் பூஜை மற்றும் நடிகை மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் விஜய் உடன் மோகன், ஜெயராம், மோகன், சிநேகா, பிரசாந்த், பிரபுதேவா, விடிவி கணேஷ், லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thalapathi 68 #vijay #Ags #venkat prabhu #yuvan shankar raja
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story