×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம கெத்தாக.. வெளியானது தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டர்! பட டைட்டில் என்ன பார்த்தீர்களா! கொண்டாடும் ரசிகர்கள்!!

தளபதி விஜய் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக

Advertisement

தளபதி விஜய் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அவர்களுடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

தளபதி 65 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது.
மேலும் தற்போது கொரோனா இரண்டாவது அலையால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் 22-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதன் கொண்டாட்டமாக தளபதி 65வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. 

இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி- 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தளபதி 65 வது படத்திற்கு பீஸ்ட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை தளபதி ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thalapathy 65 #beast #first look
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story