அட அட.. தல - தளபதி இணைந்து எடுத்துக்கொண்ட அல்ட்ரா லெவல் போட்டோ..! கொண்டாடும் ரசிகர்கள்..!!
அட அட.. தல - தளபதி இணைந்து எடுத்துக்கொண்ட அல்ட்ரா லெவல் போட்டோ..! கொண்டாடும் ரசிகர்கள்..!!

கோலிவுட்டின் மிக முக்கிய நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களை தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர்கள் என்றும் கூறலாம். இன்றைய காலகட்டத்தில் இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்க்க முடிவதில்லை.
ஆரம்பத்தில் இருவரும் நிகழ்ச்சிகளுக்கு செல்வது, ஒன்றாக இணைந்து புகைப்படங்கள் எடுப்பது என இருந்து வந்தனர். ஆனால் தற்போது இவர்கள் இணைந்து ஒரு படம் நடிக்க மாட்டார்களா? என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் இணைந்து ஒருபடம் நடித்தால், அது மாபெரும் ஹிட்டாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எப்பொழுதும் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள், விஜய் மற்றும் அஜித்தின் யாரும் பார்க்காத புகைப்படத்தை ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பர்.
தற்போது அது போன்ற ஒரு ரசிகர் பக்கத்தில் அஜித் - விஜய் இருவரும் இணைந்து ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் மிர்ச்சி சிவாவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.