ரசிகர்களுக்காக மீண்டும் களமிறங்கும் தல - தளபதி பட நடிகை.!
thala - thalapathi - movie actress swathi - reentry
தமிழ் சினிமாவிற்கு 1995ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தேவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதன்பிறகு தல அஜித்துக்கு ஜோடியாக வான்மதி என்ற படத்திலும் நடித்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அதனை தொடர்ந்து வசந்த வாசல், செல்வா, மாப்பிள்ளை கவுண்டர் உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
அதன் பிறகு நடிப்பை விட்ட அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கிரண் என்பவரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே குடியேறி விட்டார். அவர்களுக்கு விஹான் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். கடைசியாக 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகை சுவாதி, மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘சினிமாவை நான் மிகவும்நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்தை மதித்து, மீண்டும் நடிக்க வந்துள்ளேன். இதற்கு என் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.