அழகான குழந்தைக்கு அப்பாவான பிக்பாஸ் சென்ட்ராயன்.! வாழ்த்து கூறிய பிரபல நடிகரின் மனைவி.!
thaadi balaji wife wish sendrayan

தமிழ் சினிமாவில் வில்லனாகவும், காமெடி நடிகராகவும் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களிடையே பிரபலமானவர் நடிகர் சென்ட்ராயன்.
இதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 பங்கேற்றதன் மூலம் பெருமளவில் பிரபலமானார். மேலும் எதார்த்தமான பேச்சிற்கும், வெளிப்படையான நடவடிக்கைகளுக்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.
நடிகர் சென்றாயனுக்கு திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை. இதனை அவர பிக்பாஸ் வீட்டில் இருந்த போது மிகவும் கவலையுடன் சக போட்டியாளர்களிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, விருந்தினராக சென்ற அவரது மனைவி கயல்விழி தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி இன்ப சென்றாயனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனைக் கேட்ட சென்றாயன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். பின்னர் அவரது சக போட்டியாளர்களால் சென்ட்ராயன் மனைவிக்கு வளைகாப்பு விழாவும் நடைபெற்றது.
இந்நிலையில் சென்றாயனுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையும் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக கூறி புகைப்படம் வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளரான தாடி பாலாஜியின் மனைவி நித்தியாவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.