தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விசாரணையின் போதே தன்னை விரலைக் காட்டியும், நாக்கை துருத்தியும் மிரட்டிய போலீஸ் எஸ்.ஐ! தாடி பாலாஜி பரபரப்பு புகார்!

thaadi balaji complaint on p[olice si

thaadi balaji complaint on p[olice si Advertisement

நடிகர் தாடி பாலாஜிக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நித்யா தனது மகளுடன் தனியாக  வசித்து வந்தார். ஆனால் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர்.

அந்த சமயத்தில், பாலாஜி ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்றும் நித்யா கண்டிஷன் போட்டார். இதையடுத்து சமீபத்தில் நித்யா காவல்நிலையத்தில் பாலாஜி தன்னையும், தனது மகளையும் மிரட்டுவதாகவும், புகார் அளித்திருந்தார். இந்நிலையில்  நடிகர் பாலாஜி தனது வழக்கறிஞருடன் ஆஜராகி  விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என்பவர் மீது நடிகர் பாலாஜி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

thadi balaji

இதுதொடர்பான விசாரணைக்கு கடந்த 13ஆம் தேதி மனோஜ்குமார் மற்றும் தாடி பாலாஜி ஆகியோர் ஆஜராகினர். அப்போது மனோஜ்குமார் தன்னுடைய உடல் செய்கையால் தன்னை மிரட்டியதாக தாடி பாலாஜி அப்போதே குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். இதனையடுத்து உதவி ஆய்வாளரின் இந்த செய்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடிகர் தாடி பாலாஜி புகார் அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாலாஜி, "அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், தன்னை மிரட்டுவதாகவும் துணை ஆணையர் விசாரணையின் போதே தன்னை விரலைக் காட்டியும், நாக்கை துருத்தியும் மிரட்டியதாகவும்" தெரிவித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thadi balaji #complaint on si
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story