தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு.! அவரோட தற்போதைய நிலை என்ன?? ஷாக்கான ரசிகர்கள்!!

பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு.! அவரோட தற்போதைய நிலை என்ன?? ஷாக்கான ரசிகர்கள்!!

Sushmitha sen affected by heart attack Advertisement

பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுஷ்மிதா சென். தற்போது 47 வயதாகும் அவர் இதுவரை  திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். மேலும் இரு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். நடிகை சுஷ்மிதா சென் தமிழில் ரட்சகன் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

மேலும் அவர் தற்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அவர் கூறியதாவது, உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாக, பலமாக வைத்துக் கொள்ளுங்கள். அது மிகவும் தேவைப்படும்போது துணை நிற்கும். இது எனது தந்தை சுபிர் சென் சொன்ன வார்த்தை.
இரு தினங்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு, ஸ்டென்ட் போடப்பட்டுள்ளது. எனக்கு பலமான இதயம் என இருதயநோய் நிபுணர் உறுதிப்படுத்தினர்.

சரியான நேரத்தில் எனக்கு உதவிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மற்றொரு பதிவில் அதனை நான் தெரிவிக்கிறேன். தற்போது நான் நலமாக உள்ளேன் என தெரிவிப்பதற்காக இந்த பதிவை பகிர்ந்துள்ளேன்.நான் மறுபடியும் வாழ தயாராக இருக்கிறேன் என உணர்வுபூர்வமாக பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.


    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sushmitha sen #heart attack
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story