×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளிவந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! செம உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!! என்ன விஷயம் தெரியுமா??

வெளிவந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! செம உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!! என்ன விஷயம் தெரியுமா??

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவர் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ்  இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் டாக்டர் பட நடிகை ப்ரியங்கா மோகன் ஹீரோயினாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் அவர்களுடன் தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு,ராதிகா, சூரி,  தங்கதுரை உள்ளிட்ட பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கிராமத்து பின்னணியில், குடும்பத்தினை, உறவுகளின் முக்கியத்துவத்தை கூறும் படமாக உருவாகியுள்ளது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் படம் பிப்ரவரி 4 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிபோனது. இந்த நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#surya #release
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story