தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை வனிதாவை தரக்குறைவாக பேசிய சூர்யாதேவிக்கு நேர்ந்த கதி! அதிரடி முடிவால் அதிர்ச்சி!

Surya devi arrest for talking badly about vanitha

surya-devi-arrest-for-talking-badly-about-vanitha Advertisement

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் இதற்கு மோசமாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தனது கணவர், என்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும்,  அவரைக் குறித்து தரக்குறைவாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாகவும், நடிகை வனிதாவிற்கு எதிராகவும் நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்ட பலரும் கருத்துகளை கூறி வந்தனர்.  மேலும் இதனால் டுவிட்டரில் பெரும்மோதலும்  ஏற்பட்டது.

arrest

இந்நிலையில் சூர்யாதேவி என்ற பெண் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்தும், அவரைக் குறித்தும் மிக ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி யூடியூப்பில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் வனிதா,  சூர்யாதேவி மீது அவதூறு பரப்புவது,  கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் சூர்யா தேவியும் நடிகை வனிதா மீது வடபழனியில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் இருவரையும் விசாரணை செய்த போலீசார், அவதூறு செய்யும் வகையில் மோசமான வீடியோக்களை இனி வெளியிடக் கூடாது என இருவருக்குமே எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதனையும் மீறி சூர்யாதேவி தொடர்ந்து மோசமான வீடியோக்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரை  தற்போது வடபழனி  மகளிர் காவல்நிலைய போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். சூர்யாதேவி ஏற்கனவே இதற்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் மற்றும் தற்போதைய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசி கைது செய்யப்பட்டவராவார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#arrest #Suryadevi #vanitha
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story