தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"வாய்ப்பு கேட்டா இப்பிடியா பண்ணுவீங்க" வடிவேலுவை சரமாரியாக விலாசிய நடிகை..

வாய்ப்பு கேட்டா இப்பிடியா பண்ணுவீங்க வடிவேலுவை சரமாரியாக விலாசிய நடிகை..

Supporting actress controversy Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நட்சத்திரமாக நடித்து வருபவர் வடிவேலு. இவர் திரைப்படங்களில் காமெடி நட்சத்திரமாக கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை கதாபாத்திரமாக வலம் வந்த வடிவேலு, சில காலமாக சர்ச்சைகளில் சிக்கி திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

Vadivelu

இதன் பின்னர் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்த வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ், எலி போன்ற ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். இப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதன்பின் வடிவேலு கதாநாயகனிலிருந்து மீண்டும் காமெடி நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தார்.

இதுபோன்ற நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை அடைந்து வடிவேலுவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பல துணை நடிகை நடிகர்கள் வடிவேலுவை குறித்து சர்ச்சையான கருத்தை கூறி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' திரைப்படத்தில் நடித்த நடிகை, வடிவேலுவிடம் ஏதாவது படத்தில் வாய்ப்பு இருக்குமா என்று கேட்டபோது அவர் "ஓ குண்டச்சியா, ஏதாவது இருந்தா சொல்லுறேன்" என்று திமிராக பதில் அளித்தாராம். இவ்வாறாக பேட்டியில் நடிகை தேவி ஸ்ரீ கண் கலங்கியபடி பேசினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vadivelu #actress #controversy #Kollywood #Movoe
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story