வேற லெவல் மாகாபா... பீஸ்ட் பட பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிரியங்கா, மாகாபா....! வைரலாகும் டான்ஸ் வீடியோ இதோ...
வேற லெவல் மாகாபா... பீஸ்ட் பட பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிரியங்கா, மாகாபா....! வைரலாகும் டான்ஸ் வீடியோ இதோ...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை கலகலப்பான பேச்சாலும், செயலாலும் தொகுத்து வழங்கி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து பிரபலமான தொகுப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மாகாபா.
மேலும் மாகாபா தொகுப்பாளார் மட்டுமில்லாது சிறந்த நடிகரும் கூட. இவர் வானவராயன் வல்லவராயன், நவரச திலகம், கடலை, மீசையை முறுக்கு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு, திறமையாக விளையாடி போட்டியின் இறுதிவரை சென்ற அவர் இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரியங்கா தற்போது வழக்கம் போல் சூப்பர் சிங்கரை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் பட பாடலுக்கு பிரியங்கா, மாகாபா ஆனந்த் மற்றும் பாடகர் பென்னி தயால் என அனைவரும் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...