×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆமா.. அது உண்மைதான்! வருங்கால கணவர் குறித்து போட்டுடைத்த சூப்பர் சிங்கர் பிரபலம்! ஷாக்கான ரசிகர்கள்!!

ஆமா.. அது உண்மைதான்! வருங்கால கணவர் குறித்து போட்டுடைத்த சூப்பர் சிங்கர் பிரபலம்! ஷாக்கான ரசிகர்கள்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி மக்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இது சீனியர்,ஜூனியர் என மாற்றி மாற்றி அனைத்து வயது தரப்பினருக்கும் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 8  மிகவும் கோலாகலமாக துவங்கி, வெற்றிகரமாக முடிவடைந்தது. மேலும் விரைவில் சூப்பர் சிங்கர் ஜூனியர் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் மாளவிகா சுந்தர். அவரது பாடல்களுக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து அவருக்கு படங்களில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் மாளவிகா ஹிந்தியிலும் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் மாளவிகா அண்மையில் விரைவில் தனக்கு திருமணமாகவிருப்பதாக அறிவித்திருந்தார். மேலும் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய மாளவிகா, என்னை விட எனது வருங்கால கணவர் ஒரு வயது குறைவானவர்தான். திருமணத்திற்கு வயது தடையில்லை, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#super singer #marriage #malavika
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story