திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புது படத்தை ஒளிபரப்பும் சன் டிவி! என்ன படம் தெரியுமா?
Sun tv vinayagar shathurthi special movie

வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்ட இருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல வண்ணங்களில், பலவிதமான விநாயகர் சிலைகள் தயாராகிவருகின்றனர். அதேபோல், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அணைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் சிறப்பு படங்கள் திரையிடப்படுகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு SJ சூர்யா நடித்த மான்ஸ்டர் மற்றும் ரியோ நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படமும் திரையிடப்படுகிறது.
சன் டீவியில் விநாயகர் சதுர்ச்சி அன்று காலை 11 மணிக்கு பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 திரைப்படம் திரையிடப்படுகிறது. மாலை 6 மணிக்கு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம் Mr . லோக்கல் திரையிடப்படுகிறது.