தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிக்கலில் சிக்கிய பிரபல சன் டிவி சீரியல் நடிகர்! என்ன நடந்தது தெரியுமா?

Sun tv seriyal actor birla bose house problem

sun-tv-seriyal-actor-birla-bose-house-problem Advertisement

இந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பிரபலமானவை. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள், திருமதி செல்வம், பந்தம் போன்ற நாடகங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிர்லா போஸ். மேலும், தனி ஒருவன், துப்பறிவாளன் போன்ற படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் கடைசியாக நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் நிரோஷாவின் அணியில் சேர்ந்து வெற்றியும் பெற்றார். தற்போது சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார் பிர்லா போஸ்.

  Sun tv

இந்நிலையில் இவர் தங்கியுள்ள வீடு பறிபோகும் நிலையில் உள்ளது. இதனால் இன்று கமிஷனர் அலுவலகத்திற்கு புக்கர் அளிக்க வந்திருந்தார் பிர்லா போஸ். அவர் அளித்துள்ள புகாரில், நான் மதுரவாயல், பகுதியில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்த வீட்டை பாலாஜி என்பவரிடம் குத்தகைக்கு வங்கியிருந்தேன். ஒருநாள், வங்கியில் இருந்து வந்த அதிகாரிகள், வீடு ஜப்தியில் உள்ளது என கூறி, உடனே காலி செய்ய வேண்டும் என்று கூறினர். எனக்கு எதுவும் புரியவில்லை.

எனவே வீடு சம்பந்தமாக சிலர் தன்னை ஏமாற்றி உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு முன்பு கூட இதுகுறித்து புகார் கொடுத்துள்ளதாகவும் ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sun tv #Birla bose
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story