×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்! செம கியூட்.. முக்கியமான நாளில் முதன்முதலாக தனது குழந்தையின் அழகிய முகத்தை காட்டிய சுஜா! புகைப்படம் இதோ!

suja varunee baby photo viral

Advertisement

சினிமாத்துறையில் 14 வயதில் நுழைந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் சுஜா வருணி . இவர் கதாநாயகியாக அறிமுகமானாலும், சினிமாவில் ஒற்றை பாடலுக்கு தான் அதிகமாக நடனமாடி இருக்கிறார்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

இந்நிலையில் சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகன்  சிவகுமாரும் 10 ஆண்டுகளாக  காதலித்து வந்தநிலையில் கடந்த ஆண்டு  இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

மேலும் அவர்களுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆத்வைத் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சுஜா தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் கையில் குழந்தை உள்ள புகைப்படம் மற்றும் தீபாவளியன்று வாழ்த்து கூறி அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். ஆனால் குழந்தையின் முகத்தை அவர் இதுவரை வெளியிட்டதில்லை. 

இந்நிலையில் சுஜா சமீபத்தில் தனது திருமண நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது தனது குழந்தையின் முகத்தினை முதல்முதலாக ரசிகர்களுக்கு காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suja varunee #Baby photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story