இதுதான் காதலா? புட்டு புட்டு வச்சுட்டாரே.... அப்போ அது உண்மை இல்லையா..? விஜய்-த்ரிஷா ரகசியத்தை அக்குவேறு ஆணிவேறாக போட்டு உடைத்த சுசித்ரா.!!!
விஜய் பிறந்தநாளில் த்ரிஷா பகிர்ந்த புகைப்படம் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாக பாடகி சுசித்ரா சந்தேகம் எழுப்பியுள்ளதால் சமூக வலைத்தளங்களில் புதிய விவாதம் உருவாகியுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவின் நட்பு குறித்த பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா பகிர்ந்த புகைப்படம் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படம் உண்மையானது அல்ல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாக பாடகி சுசித்ரா கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஏஐ படம் என சுசித்ரா விளக்கம்
தனது விளக்கக் காணொளியில் பேசிய சுசித்ரா, அந்தப் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் அது 2D மற்றும் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதற்கான பல அடையாளங்கள் தென்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, விஜய்யின் சட்டை காலர் இயல்பற்ற முறையில் மடிந்திருப்பதும், அவர் மேஜைக்கு அருகில் நிற்கும் விதமும் இயற்கையாக இல்லாத தோற்றத்தை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தாலி கட்டுவது உறுதி.. தேதி மட்டும் அப்புறம் வெளியாகும்! விஜய் - த்ரிஷா திருமணம் கிசுகிசு..? திரிஷாவின் தாயார் கொடுத்த பதில் ரியாக்க்ஷன்!!!
கேக் அமைப்பையும் சுட்டிக்காட்டிய சுசித்ரா
மேலும், பெரிய கேக்கிற்கு முன்பாக மூன்று சிறிய கேக்குகள் இடம்பெற்றிருப்பதும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கங்களில் காணப்படும் அம்சங்களில் ஒன்றாக இருப்பதாக சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். சட்டசபையில் எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் தீவிர விவாதம்
“இதுதான் காதலா?” என்று நக்கலாகக் கேள்வி எழுப்பிய சுசித்ராவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக த்ரிஷா பகிர்ந்த புகைப்படம் உண்மையானதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக த்ரிஷா அல்லது விஜய் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: தந்தை முதல்வர் பதவியேற்ற நாளில் மகன் சஞ்சய் போட்ட அந்த ஒரு பதிவு.....! அதைக்கண்டு அதிர்ச்சியில் விஜய்..!!!!!