பசங்க பட நடிகர் ஸ்ரீராமுக்கு டும்டும்டும்! குவியும் வாழ்த்துக்கள்..
பசங்க பட புகழ் ஸ்ரீ ராம் நிகில் பிரியாவை திருமணம் செய்துள்ளார். திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ ராம். இவர் “கற்றது தமிழ்” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார். அந்த பின்னர் வெளியான “பசங்க” திரைப்படம் மூலம் பெரும் புகழைப் பெற்றார். குறிப்பாக, பசங்க படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மனதில் ஒளிந்திருக்கும்.
நடிப்பை தொடர்ந்து சில படங்களில் நடித்துவரும் ஸ்ரீ ராம் தற்போது ஒரு பயோடெக் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். திரையுலகமும் தொழில்துறையும் சமநிலைப்படுத்தி முன்னேறி வருகிறார் என்பது பெருமைக்குரியது.
இந்நிலையில், நடிகர் ஸ்ரீ ராம் தனது நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிகில் பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மனதார வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எல்லாரும் வந்துட்டாங்க எடுங்க... சித்தார்த்தை நைஸாக கழட்டி விட்ட சரத்குமார்! அசிங்கப்பட்டு வெளியேறினாரா? வைரல் வீடியோ....
ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வெற்றிகரமாக வாழ்க்கையின் புதிய பாதையில் நுழைந்துள்ள ஸ்ரீ ராம் தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள் குவிகின்றன.
இதையும் படிங்க: இறுதிவரை எத்தனை முறை சொல்லியும் முடியாத்துனு சொல்லிட்டாங்க! நயன்தாரா குறித்து ஓப்பனாக பேசிய யோகி பாபு!