×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை ஸ்ரீதிவ்யாவா இது? ரசிகர்களை குஷியாக்கி, இணையத்தையே கலக்கும் அழகிய புகைப்படம்!!

sridivya latest photo viral

Advertisement

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏரளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கியது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில்,பெங்களூரு நாட்கள்,மருது, காஷ்மோரா  மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது எந்த படவாய்ப்புகளும் கிடைக்காதநிலையில் அவர் சமூக வலைதளங்களில் பிஸியாக உள்ளார். மேலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இது யார் என்று சொல்லுங்கள் என கேட்டுள்ளார்.  இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதற்கு பதிலளித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sridivya #latest photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story