×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறாரா இந்த கவர்ச்சியான சர்ச்சைநாயகி? அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

sri reddy in bigboss show

Advertisement

தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 3 தற்பொழுது மிகவும் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. அதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தமிழைப் போலவே தெலுங்கு தொலைக்காட்சியிலும் பிக்பாஸ் சீசன் 3 விரைவில் தொடங்க உள்ளது.மேலும் இதில் பிக்பாஸ் முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். அவரை தொடர்ந்து இரண்டாவது சீசனை நடிகர் நானி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.  இந்நிலையில் தற்பொழுது தொடங்கவிருக்கும் பிக்பாஸ் மூன்றாவது சீசனை நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3  போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நிகழ்ச்சியில் பங்குபெற பலரும் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நடிகை ஸ்ரீரெட்டி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

ஆனால் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்ரீரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.அதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sri reddy #bigboss #telungu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story