×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. உங்களுக்கு தெரியுமா? சினிமாவில் நடிப்பதற்கு முன் நடிகை ஸ்ரீதிவ்யா இந்த பிரபல சீரியலில் நடிச்சுருக்காராம்!!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபல

Advertisement

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. முதல் படமே இவரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய வைத்தது.

பின்னர் ஸ்ரீ திவ்யாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், அவர் ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  பின்னர் இறுதியாக அவர்  2017ம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். மேலும் தற்போது அவரை குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே  தெலுங்கில் பிரபலமான Thoorpu Velle Rallu என்கிற சீரியலில் முக்கிய ரோலில் நடித்துள்ளாராம். இதனை அறிந்த ரசிகர் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sri divya #serial #movie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story