தல அஜித்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே இவர்தானாம்! யார் தெரியுமா?
SP Balasupramaniyam said iam the person who introduced ajith in cinema

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார் அஜித். இந்நிலையில் அஜித்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியது நான்தான் என்று கூறியுள்ளார் பிரபல பின்னணி பாடகர் SP பாலசுப்ரமணியம்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க நான்தான் அஜீத்தை அறிமுகம் செய்தேன். இப்போது பெரிய ஹீரோவாகி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆந்திராவில் இருந்தபோது எனது மகன் சரனும், அஜித்தும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள் என்றும், அஜித் விளமப்ர படங்களில் நடிக்க எனது மகனின் உடையைத்தான் சென்டிமெண்டுக்காக அணிந்துசெல்வர் என்றும் கூறியுள்ளார் SP பாலசுப்ரமணியம்.