×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நம்ம ஹீரோ சூரி செய்துள்ள வேலையை பார்த்தீர்களா! குவியும் வாழ்த்துக்கள்!

soori celebrate children day with school children

Advertisement

இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சூரி. பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வந்த பரோட்டா காமெடி மூலம் தமிழ் சினிமாவில் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விஷால் என தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். மேலு‌ம் இவர் இன்று புகழின் உச்சியில் இருந்து வருகிறார். ரசிகர்களிடையே தனி இடத்தை பெற்ற இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இன்று ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் இந்தியா குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பள்ளிகள் முழுவதும் குழந்தைகள் தினம் கோலாகலமாக  கொண்டாப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நடிகர் சூரி தனது அலுவலகம் அமைந்துள்ள சாலிகிராமம் பகுதியில் இயங்கிவரும் பத்மா சாரங்கபாணி என்ற பள்ளிக்கு குழந்தைகள் தினவிழா கொண்டாட சென்றுள்ளார். அங்கு அவர் மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட வீடியோவை வாழ்த்து கூறி தனது டுவிட்டர் பக்கத்திள் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட  நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து  கூறிவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Soori #children day #celebration
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story