×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதை செய்வதற்கு கூட துணிந்து விட்ட சோனியா அகர்வால்! வாய்ப்புகள் இல்லாததுதான் காரணமா?

Soniyaa agarval acting in negative role

Advertisement

காதல் கொண்டேன், கோவில், 7G ரெயின்போ காலனி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வால் தற்போது மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் ‘உன்னால் என்னால்’. இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். அதிரடி வில்லி கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார்.

முகமது ரிஸ்வான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான். தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.

மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால், ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார். அந்த வலையில் ஜெகா, உமேஷ், ஜெயகிருஷ்ணா ஆகிய மூவரும் வந்து சிக்குகிறார்கள்.

இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் கதை. இதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம்.

அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம். இப்படம் வித்தியாசமாக இருக்கும்’ என்றார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#soniya agarwal #Selva ragavan #Dhanush
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story