×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை சினேகா- பிரசன்னாவுடன் செம க்யூட்டாக நிற்கும் இவர் இந்த முன்னணி நடிகரின் அக்காவா! இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா..!

நடிகை சினேகா தனுஷின் அக்காவுடன் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

Advertisement

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம்,  விரும்புகிறேன், வசீகரா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்களால் புன்னகை இளவரசி என அழைக்கப்பட்ட நடிகை சினேகா 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு விகான் என்ற 5 வயது ஆண் குழந்தையும் ஆத்யந்தா என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சினேகா - பிரசன்னா தம்பதியினர் தங்களது மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷின் அக்காவும், அவரது கணவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை சினேகா இறுதியாக தனுஷுடன் பட்டாசு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thanush #Snega #birthday
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story