×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது க்யூட் ஜோடி சினேகா - பிரசன்னா விவாகரத்தா?? ஷாக்கான ரசிகர்கள்!! ஒத்த புகைப்படத்தால் உண்மையை உடைத்த சினேகா!!

என்னது க்யூட் ஜோடி சினேகா - பிரசன்னா விவாகரத்தா?? ஷாக்கான ரசிகர்கள்!! ஒத்த புகைப்படத்தால் உண்மையை உடைத்த சினேகா!!

Advertisement

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவுலகில் அறிமுகமான அவர் தமிழில் என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித், கமல், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

புன்னகை இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த பிரசன்னாவை காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கியூட் நட்சத்திர ஜோடிகளாக விளங்கிவரும் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர்கள் அவ்வப்போது தங்களது குடும்ப புகைப்படங்களை பகிர்வர்.

 இந்த நிலையில் அண்மையில் சினேகாவும், பிரசன்னாவும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும், பிரச்சினையின் காரணமாக இருவரும் தனிதனியாக வாழ்ந்து வருவதாகவும் வதந்திகள் பரவியுள்ளது. இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் வகையில் நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஹேப்பி வீகேன் என பதிவு செய்துள்ளார். அது வைரலாகி வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியில்லை என கருத்து கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Snega #Prasanna #divorce
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story