SK ரசிகர்களே தயாரா.! 05:30 மணிக்கு அட்டகாசமான அப்டேட்.!
SK ரசிகர்களே தயாரா.! 05:30 மணிக்கு அட்டகாசமான அப்டேட்.!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், 'பராசக்தி' திரைப்படம் தற்போது உருவாகி வருகின்றது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், தற்போது படத்தின் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த திரைப்படமானது கடந்த 1965-இல் வெளியான இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு அரசியல் வரலாற்று திரைப்படமாகும். சுதா கங்கரா இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா, ரவி மோகன் மற்றும் நடிகை ஸ்ரீலிலா நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நிலையில், இது ஜிவி பிரகாஷின் 100-வது திரைப்படமாகும். இது பொங்கலுக்காக வரும் ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான, 'அடி அலையே' என்று மாலை 05:30 மணிக்கு வெளியாக உள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Video : நடிகர் விஜய் சேதுபதியின் "தலைவன் தலைவி "திரைப்படத்தின் டிரைலர் வெளியானது! இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இப்பாடலின் ப்ரோமோ நேற்று முன் தினம் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீ லீலா ஜோடிக்கி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் மகன்கள் எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க! தற்போதைய புகைப்படம் இதோ...