லட்சத்தில் இருந்து தற்போது கோடியில் வாழ்க்கை வாழும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா! அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
லட்சத்தில் இருந்து தற்போது கோடியில் வாழ்க்கை வாழும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா! அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் எஸ் ஜே சூர்யா. இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த இவர், ஆரம்ப காலத்தில் ஹோட்டலில் வேலை பார்த்து கொண்டு தான் சினிமாவில் பயிற்சி எடுத்தார்.
சினிமாவில் ஹீரோவாக வரவே விரும்பிய இவர், நிதி சிக்கலால் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் குறைந்த சம்பளத்தில் வாலி திரைப்படத்தில் பணியாற்றிய இவர், பின்னர் குஷி படத்திற்கு அதிகமான சம்பளம் பெற்றார்.
நியூ என்ற திரைப்படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர், கதாநாயகன் என மூன்று முக்கிய பொறுப்புகளையும் ஏற்று நடித்தார். ஆனால் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால், இவர் வில்லன் மற்றும் சிறப்பு தோற்றங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: லிப் டூ லிப் முத்தம் கொடுத்து வாழ்த்து! நீ என் உயிரை விட முக்கியமானவள்! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை....
இறைவி திரைப்படம் மூலம் இவர் மீண்டும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பின்னர், மெர்சல் மற்றும் ஸ்பைடர் படங்களில் வில்லனாக நடித்த இவர், கதாநாயகர்களுக்கு சவாலாக திகழ்ந்தார்.
எஸ் ஜே சூர்யாவின் சொத்து மதிப்பு
இப்போது எஸ் ஜே சூர்யாவின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. தற்போது இவர் ஒரு திரைப்படத்திற்கு 5 முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.
சென்னை மற்றும் தன் சொந்த ஊரில் பல்வேறு நிலங்கள் மற்றும் சொகுசு கார்கள் வைத்திருக்கும் இவரின் மொத்த சொத்து மதிப்பு 150 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல! சிரித்த முகத்துடன் பேசிய தன்ஷிகாவிற்குள் இவ்வளவு சோகமா?