×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டான் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல ரொமான்டிக் ஹீரோ! அட சும்மா கதறவிட போறாரே!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் படத்தில் அவருக்கு வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையால் முன்னேறி,ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்துள்ளார்., 

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சி பி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் டான் என்ற படத்தில் நடிக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் அனிருத் இசையமைக்கிறார்.

    

இந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல நடிகரான எஸ்.ஜே சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரொமான்டிக் ஹீரோவாக பல படங்களில் நடித்த அவர் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் படம் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் கொடூர வில்லனாக ரசிகர்களை மிரட்டியுள்ளார்.  மேலும் சிம்புவின் மாநாடு படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sivakarthickeyan #sj surya #Villain
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story