×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லன் இந்த பிரபல நடிகரா? அவரே கூறிய தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

sj surya not a villain in valimai movie

Advertisement

தமிழ் சினிமாவில் குஷி மற்றும் வாலி போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராக பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதனை தொடர்ந்து அவர் அன்பே ஆருயிரே, நியூ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இறைவி திரைப்படத்தின் மூலம் அவள் ஏராளமான ரசிகர்களை பெற்று சிறந்த நடிகராக விளங்கினார்.

இதனை தொடர்ந்து சில காலங்கள் நடிப்பிற்கு முழுக்கு போட்ட அவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்திலும்  வில்லனாக நடித்திருந்தார். அப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டது. மேலும் அவர் ஹீரோவாக நடித்ததை விட  வில்லனாக நடித்தது ரசிகர்களிடையே பெருமளவில் ரீச்சானது.

இந்நிலையில் அவர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து எஸ். ஜே சூர்யா கூறுகையில், இதுவரை வலிமை படத்தில் நடிப்பது குறித்து படக்குழுவினர் யாரும் என்னை அணுகவில்லை. நான் இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை. ஆனால் அப்படி அழைத்தால் கண்டிப்பாக நான் அதில் வில்லனாக நடிக்க தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sj surya #Valimai #Ajith
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story