×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்த விஷயத்திற்காக தரையில் புரண்டு அழுது அடம் பிடித்த எஸ்ஜே சூர்யா.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.?

அந்த விஷயத்திற்காக தரையில் புரண்டு அழுது அடம் பிடித்த எஸ்ஜே சூர்யா.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.?

Advertisement

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் எஸ் ஜே சூர்யா. நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தற்போது நடிகராக வலம் வருகிறார். ஆரம்பத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இதன்பின் தமிழில் இயக்குனராக பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். இதன்பின் நடிகராக கள்வனின் காதலி, இசை, வியாபாரி, திருமகன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் மாநாடு, மெர்சல் போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இது போன்ற நிலையில், எஸ் ஜே சூர்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் சினிமா துறையில் அவர் நடிகரான விதத்தையும், அவர் சந்தித்த சவால்களையும் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில் எஸ் ஜே சூர்யா கூறியதாவது, "நான் இந்தியா முழுவதும் மிகச் சிறந்த இயக்குனராக வேண்டும் என்பதே எனது ஆசை. இதன்படி அமிதாப்பச்சன் சாரை வைத்து ஒரு படத்தை இயக்க ஆரம்பித்து பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இதன் பிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை படப்பிடிப்பு பாதியில் நின்று விட்டது. அப்பொழுது நான் தரையில் படுத்து ஒரு குழந்தையைப் போல கதறி அழுதேன். இதன் பிறகு தான் நடிப்பில் உச்சம் தொட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது" என்று கூறியிருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sj #surya #Acter #Kollywood #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story