×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் இயக்குனராகும் ஹிப்ஹாப் ஆதி! பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரட்டுதே!! கொண்டாடும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி

Advertisement

தமிழ் சினிமாவில் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து, தனது பாடலால் பெருமளவில் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. அதனைத் தொடர்ந்து இயக்குநராக களமிறங்கிய அவர் மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் அப்படத்தின் மூலம் தானே கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஆதி நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில்  ஹீரோவாக நடித்துள்ளார். இவரது படங்களுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. 

இவ்வாறு இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டு விளங்கும் ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக சிவகுமாரின் சபதம் என்ற படத்தை இயக்கவுள்ளார். மேலும் அப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியே கதாநாயகனாக நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது  வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#hiphop aadhi #sivakumar sapatham
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story