தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"லீக்கானது எஸ் கே 21 படத்தின் காட்சிகள்!" படக்குழு அதிர்ச்சி!

லீக்கானது எஸ் கே 21 படத்தின் காட்சிகள்! படக்குழு அதிர்ச்சி!

Sivakarthikeyan movie scenes leaked Advertisement

நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் சிவகார்த்திகேயன். இவர் 2012ம் ஆண்டு "மெரினா" திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா என பல படங்களில் நடித்துள்ளார்.

Sk21

தற்போது 'எஸ் கே 21' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர் இன்டர்நேஷனல் பிராடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் முதல் ஷெட்யூல் காஷ்மீரில் 75 நாட்கள் நடந்தது. சிவகார்த்திகேயன் இதில் ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம். இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

புயலால் சென்னையே வெள்ளக்காடாக இருக்கும் நிலையில், ஒரு தனி வீடு எடுத்து அதில் படிப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி கையில் ஒரு பெண்குழந்தையுடன் இருக்கும் காட்சி தற்போது லீக்காகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sk21 #movie #Kollywood #cinema #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story