அடேங்கப்பா... எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் நடிகர் சிவகார்த்திகேயணை பார்க்க..! வைரலாகும் வீடியோ இதோ....
அடேங்கப்பா... எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் நடிகர் சிவகார்த்திகேயணை பார்க்க..! வைரலாகும் வீடியோ இதோ....

தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக உள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். பல முன்னணி நடிகர்களுக்கும் இணையாக இவரும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அதேபோல் பலரும் இவரது படங்களை குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் பார்ப்பது வழக்கம்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றதுடன் 100 கோடி வசூல் சாதனையும் படைத்துள்ளது. டாக்டர் படத்தை தொடர்ந்து டான் திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK 20 படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங் காரைக்காலில் நடந்துவரும் நிலையில் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிவகார்த்திகேயனை பார்க்க மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே திரண்டுள்ளது. இதோ அந்த வீடியோ...