அடேங்கப்பா! சிவகார்த்திகேயன் மகள் பாடிய பாடலை இதுவரை எத்தனை கோடி பேர் பார்த்துளார்கள் தெரியுமா?
Sivakarthikeyan daughter aarathana song reached million people

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு அடுத்தபடியாக பேசப்படுபவர் நடிகர் சிவா கார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான அணைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டர் சிவா.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அவரது படங்களிலேயே இந்த படம்தான் வசூல் குறைவு என பல திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க நடிகர் சிவகார்திகேயன் சொந்தமாக கனா எனும் திரைப்படத்தினை தயாரித்து வருகிறார். விளையாட்டில் பெண்களின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருகிறது. இதில் மேலும் சிறப்பு என்ன வென்றால் இந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை சிவகார்த்திகேயனின் மக்கள் ஆராதனா தந்தையுடன் இனைந்து பாடியுள்ளார்.
அந்த பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பலரது பேவரைட் பாடலாகவும் உள்ளது. இந்நிலையில் அந்த பாடலை இதுவரை 51 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அதாவது ஐந்து கோடிக்கும் அதிகமானோர் இந்த வீடீயோவை பார்த்து ரசித்துள்ளனர். தனது மகள் படைத்த சாதனை மூலம் சீமராஜா தோல்வியை மறந்துவிட்டு சந்தோசமாக இருக்கிறாராம் நடிகர் சிவகார்த்திகேயன்.