குடும்பத்துடன் பொங்கலை கோலாகலமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்! வைரலாகும் புகைப்படம்.
Sivakarthikayan

நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர். அதன் பிறகு நடிகர் தனுஷுடன் இணைந்து 3 படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் காலடிப்பதித்தார். அதன் பின் மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
மேலும் தனது கடினமான உழைப்பாலும், நகைச்சுவையாலும் குழந்தை ரசிகர்களை அதிகம் சம்பாதித்தவர். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி இன்று இவர் ஒரு முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகை என்பதால் தனது குடும்பத்துடன் பொங்கலை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தற்போது அப்புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.