படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன்.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன்.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்து வருகிறது. டான் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்
அனுதீப் இயக்கத்தில் SK20 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் நவீன் பாலீசெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கவுள்ளார்.
இதன் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொடங்கி நடைபெற்ற நிலையில், அடுத்த கட்டமாக தற்போது பாண்டிச்சேரி கடற்கரையில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் ஹீரோயின் மரியாவும் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்புக்கு நடுவே சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.