×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்ளீஸ்..இதை செய்யுங்க! இதுதான் ஒரே வழி! நடிகர் சிவகார்த்திகேயன் விடுத்த வேண்டுகோள்! வைரலாகும் வீடியோ!!

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி கோரத்தாண்டவமாடி வர

Advertisement

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த  வீடியோவில் சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது, கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி நமக்கெல்லாம் அச்சுறுத்தலா இருக்கிறது மட்டுமில்லாமல் நிறைய உயிர் சேதங்களை ஏற்படுத்துகிறது. இதை தடுப்பதற்காக நம் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் நிறைய நடவடிக்கைகளை எடுக்குறாங்க. நமக்கு நிறைய விதிமுறைகளை சொல்லியிருக்காங்க. அதில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ளதான் இந்த வீடியோ.

அதில் மிக முக்கியமானது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது. நான் என்னுடைய ஃபர்ஸ்ட் டோஸை போட்டுவிட்டேன். வீட்டை விட்டு மிக மிக அவசியம்னா மட்டும் தான் வெளியே வரணும். அப்படி வெளியே வரும்போது சமூக இடைவெளியை சரியாக பின்பற்ற வேண்டும். நம் கைகளை சுத்தமாக வச்சுக்கணும்.வெளியே போகும்போது எப்பொழுதுமே மாஸ்க் போட்டிருக்கணும். இதை எல்லாத்தையும் கடைபிடிப்பது நம்முடைய கடமை.

ஆனால் அது மட்டுமில்லாமல் கொரோனா பற்றி எந்த பயமும் இல்லாமல் தன் உயிரையும், குடும்பத்தையும் மறந்து நம்ம எல்லோருக்காகவும் இந்த கொரோனாவை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கும் முன்களப் பணியாளர்கள், அவர்களுக்கு நாம் செய்ற மரியாதையும் அதுவாகத் தான் இருக்கும். நாம் எல்லோரும் நினைத்தால் நிச்சயமாக மீண்டு வர முடியும். ஒன்றிணைவோம், கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம். கொரோனாவை வெல்வோம், மக்களை காப்போம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sivakarthickeyan #Corono awarness
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story