6 வருஷங்களுக்கு பிறகு... செம ஹேப்பியில் பாடகி ஸ்ரேயா கோஷல்! அவரே வெளியிட்ட சந்தோஷமான செய்தி இதுதான்!!
தமிழ் சினிமாவில் ஜூலி கணபதி என்ற படத்தில் "எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்கு
தமிழ் சினிமாவில் ஜூலி கணபதி என்ற படத்தில் "எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே......" என்ற பாடலை பாடியதன் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல். இந்த பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. ஆரம்ப காலத்தில் பாலிவுட் படங்களில் மட்டும் பாடி வந்த அவர் பின்னர் தமிழில் பல பாடல்களை பாடி தனது இனிமையான குரலால் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இவ்வாறு தமிழ், ஹிந்தி, மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் எக்கசக்க பாடல்களை பாடிய ஸ்ரேயா பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். ஸ்ரேயா கோஷல் கடந்த 2015-ம் ஆண்டு வங்காளத்தை சேர்ந்த ஷிலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஆறு வருடங்களுக்கு பிறகு அவர் அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.