கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பிரபல இளம் பாடகி! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
singer dead in car accident
டெல்லியை சேர்ந்தவர் பிரபல பாடகி ஷிவானி பாடியா. அவர் நேற்று (29.01.2019) ஆக்ராவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தன்னுடைய கணவர் நிகில் பாட்டியாவுடன் காரில் பயணம் செய்துள்ளார்.
அப்பொழுது கார் மதுரா மாவட்டம் யமுனா எக்ஸ்ப்ரெஸ் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற காரை முந்தி செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது காரை கட்டுப்படுத்த இயலாமல், சென்ற வேகத்தில் சுவரில் இடித்துள்ளது.
பின்னர் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் பாடகி ஷிவானியின் கணவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.ஆனால் பாடகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்,
இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.