மீண்டும் முன்னாள் காதலியுடன் இணைந்த சிம்பு! புகைப்படம் வெளியிட்டு காதலியே கூறிய தகவல்.!
simpu join with ex lover in mahaa movie

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமான அவர் தமிழில் வேலாயுதம், மாப்பிள்ளை எங்கேயும் காதல், மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட்,புலி, போகன் போன்ற படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் ரசிகர்களால் சின்ன குஷ்பு என அழைக்கப்படும் ஹன்சிகாவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது . இந்நிலையில் ஹன்சிகா தற்போது தனது 50 வது படத்தில் நடித்து வருகிறார். மஹா என பெயரிடப்பட்ட இப்படத்தை ஜமீல் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
கதாநாயகியை மையமாகக் கொண்ட இப்படத்தில் தம்பி ராமையா, கருணாகரன், நாசர், சாயாசிங் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளில் சிம்பு நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்தது. அதற்காக சிம்பு 7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாகவும் தெரிகிறது.
நடிகர் சிம்பு நயன்தாராவை தொடர்ந்து ஹன்சிகாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தது. இந்நிலையில் மஹாபடத்தின் மூலம் மீண்டும் சிம்பு ஹன்சிகாவுடன் இணைந்து உள்ளார். இந்நிலையில் ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு உடன் கை கோர்த்தது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு மகா படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம் என