×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பர் சான்ஸ்.! நடிகர் சூர்யாவின் சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! யார் பார்த்தீங்களா!!

நடிகர் சூர்யாவின் சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! அட.. யார்னு பார்த்தீங்களா!!

Advertisement

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோவாக களமிறங்கி ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிம்பு. கடந்த சில காலங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் யாவும் பெரும் தோல்வியையே தழுவி வந்தது. 

அதனைத் தொடர்ந்து உடல் எடை கூடி இருந்த சிம்பு கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு எடை குறைந்தார். பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவுக்கு படவாய்ப்புகள் குவிந்தது.

அவரது கைவசம் தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது சிம்பு சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சூரரை போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த Homebale Films தயாரிக்கிறதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #Sudha kongara
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story