நடிகர் ஆர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல தமிழ் ஹீரோ! யார் தெரியுமா?
Simbu doing negative role in arya movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா மற்றும் சிம்பு. ஹீரோவாக இருவரும் இதுவரை பல படங்களில் நடித்துள்ள நிலையில் ஆர்யா நடிக்கவிருக்கும் புது படம் ஒன்றில் ஆர்யாவுக்கு வில்லனாக சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தை அடுத்து மாநாடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. வந்தா ராகாவாகத்தான் வருவேன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. தற்போது ஓவியா நடித்த 90 ml என்ற படத்திற்கு இசை அமைத்ததோடு சிறு வேடத்திலும் நடித்துள்ளார் சிம்பு.
இந்நிலையில் கன்னட மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஒருபடத்தின் தமிழ் ரீமேக்கில்தான் ஆர்யாவுக்கு வில்லனாக சிம்புவை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் இந்த தகவல் உறுதியாகத நிலையில் இதுபற்றிய செய்திகள் வைரலாகிவருகிறது.