விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிம்பு செய்த காரியம்.! வியந்து போன கமல்.! கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்
விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிம்பு செய்த காரியம்.! வியந்து போன கமல்.! கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்
விக்ரம் படத்தில் கமல் பாடிய 'பத்தல பத்தல' பாடலுக்கு நடிகர் சிம்புவும், சாண்டி மாஸ்டரும் நடனமாடும் வீடியோ டிரெண்டாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான சில விஷயங்கள் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பலரும் எதிர்பார்த்திடாத வகையில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு இருந்தார்.
விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின்போது அவர் சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து நடனமாடினார். இதனைப்பார்த்த கமல் வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தார். அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.