ஆகஸ்ட் 10ம் தேதி முதல் மீண்டும் ஆரம்பம்! வெளியான தகவலால் உற்சாகத்தில் சன்டிவி ரசிகர்கள்!
Siddhi serial new ebisodes starts from august 10

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் சித்தி. ராதிகா சரத்குமார் அந்த தொடரில் முக்கிய நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் அந்த தொடரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது.
இந்நிலையில் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சித்தி 2 சீரியலும் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து சித்தி 2 படப்பிடிப்புகள் துவங்கியது.