×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது.. வடிவேலு இல்லையா?? அயலான் படத்தில் ஏலியனுக்கு குரல் கொடுத்தது இந்த பிரபல ஹீரோவா.!

என்னது.. வடிவேலு இல்லையா?? அயலான் படத்தில் ஏலியனுக்கு குரல் கொடுத்தது இந்த பிரபல ஹீரோவா.!

Advertisement

நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் அயலான். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

24 ஏ. எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே. ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. அதிகளவில் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமே ஏலியன்தான்.

இந்நிலையில் இந்த ஏலியன் கதாபாத்திரத்துக்கு நடிகர் வடிவேலு டப்பிங் பேசி உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அயலான் படத்தில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ayalan #elian #siddharth
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story