முதன் முறையாக தனது காதல் முறிவு குறித்து விளக்கமளித்த நடிகை ஸ்ருதிஹாசன் !
shruthihasan told about her breakup

AR முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் பிரபல நடிகர் கமலகாசனின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார் ஸ்ருதி ஹாசன்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்துள்ள இவர் சமீபகாலமாக வாய்ப்புகள் இல்லாமல் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துவருகிறார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு தனது காதலை முறித்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அதற்கான காரணத்தை பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு அவர் காதலுக்கு இதுதான் விதி என்று இல்லை. நல்லவர்கள் சில நேரத்தில் நன்றாகத்தான் நடந்து கொள்வார்கள். அதே சமயத்தில் அதே மனிதர்கள் சில நேரங்களில் கெட்டவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் காதல் முறிவினால் எனக்கு எந்த வேதனையும் இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் இது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது எனவும் கூறியுள்ளார்.