×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னோட புது பெஸ்ட் பிரண்டு இவர்தான்! குட்டையான உடையில் ஜோடியாக நடிகை ஸ்ருதி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!!

நடிகை ஸ்ருதி ஹாசன் புதிய வீடியோ கேம் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உலகநாயகன் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். துவக்கத்தில் பின்னணி பாடகியாக இருந்த ஸ்ருதிஹாசன் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

 இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து ஸ்ருதி 3, பூஜை, சிங்கம் 3, புலி,வேதாளம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 2009இல் ஹிந்தியில் வெளியான லக் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். 
இந்நிலையில் தற்போது ஸ்ருதி புதிய வீடியோ கேம் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஸ்ருதி நான் மற்றும் எனது புதிய பெஸ்ட்பிரண்ட் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#shruthi hasan #video game
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story