உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? ரசிகரிடம் உண்மையை உடைத்த நடிகை ஸ்ருதி ஹாசன்!!
தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரபல முன்னணி நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து அவர் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு கிராக், வக்கீல் சாப் போன்ற படங்கள் வெளிவந்தது.
மேலும் அவர் தமிழில் விஜய்சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் பிரபாஸுடன் இணைந்து சலார் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகை ஸ்ருதி டெல்லியை சேர்ந்த சாந்தனு ஹசாரியா என்பவரை காதலித்து வந்தார். மேலும் இருவரும் ஒன்றாக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியாகும். இந்நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு திருமணமாகிவிட்டதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவியது.