×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான் தினமும் இவரைதான் வணங்குறேன்! நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து  ஏரா

Advertisement

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து  ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். அவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிஸியாக உள்ளார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு கிராக், வக்கீல் ஷாப் போன்ற படங்கள் வெளியாகி நல்ல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்ததாக ஸ்ருதிஹாசன் பிரபாஸ் உடன் இணைந்து சலார் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை ஸ்ருதி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் அண்மையில் கடவுள் முருகனின் புகைப்படத்தை வெளியிட்டு, கடினமான காலகட்டத்தில் தலைநிமிர்ந்து நடக்கவும் பிரகாசமான காலத்தில் தன்னடக்கத்துடனும் இருக்கவும் என்னை வழிநடத்தியுள்ளார். யாரை வணங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல. நான் தினமும் கடவுள் முருகனைத் வழிபடுகிறேன் என்று கூறியுள்ளார். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#shruthi haasan #lord muruga
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story