×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்யாணம் எப்போ? ரசிகரின் கேள்விக்கு தடாலடியாக பதிலளித்த நடிகை ஸ்ருதிஹாசன்!

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம்

Advertisement

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மூத்த மகளான அவரை முதல் படமே  பெருமளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது. அதனைத் தொடர்ந்து அவர் அஜித்,விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் கைவசம் தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் மற்றும் பிரபாஸ் உடன் சலார் போன்ற படங்கள் உள்ளன. ஸ்ருதிஹாசன் அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்கக் கூடியவர். இவர் முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2019ஆம் ஆண்டு பிரிந்தனர். இதனை தொடர்ந்து ஸ்ருதி ஹாசன் தற்போது டெல்லியை சேர்ந்த  சாந்தனு  ஹசாரியா என்பவரை காதலித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பார். இவ்வாறு அவர் அண்மையில் அவரது ரசிகர்களிடம் கலந்துரையாடிய போது, ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு அவர், நான் முற்றிலும் நேர்மையாக இருக்கப் போகிறேன் என நினைக்கவில்லை. இதிலிருந்து நாம் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது 2021. இப்பொழுது உலகில் அதிக பிரச்சனைகள் உள்ளன. பல எரியும் கேள்விகள் உள்ளன. எனவே, அமைதியாக இருங்கள் என தடாலடியாக பதிலளித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shruthi #marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story